மாசு இல்லாத தீபாவளிக்கு சீனாவின் மின்னணு பட்டாசு மூலம் தீர்வு

சோமு 2018-11-05 16:45:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதித்து சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தில்லியில் உள்ள சீன தயாரிப்பு மின்னணு பட்டாசு விற்பனைச் சந்தையில் ஒரு அதிர்வலையை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் சீன மின்னணு பட்டாசுகள்  நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டவை, அவை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை. மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு  அவை ஒளி மற்றும் ஒலியை மட்டும் உண்டாக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தில்லியில் காற்று தரம் ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது, இந்த ஆண்டு தீபாவளி நவம்பர். 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தில்லியில் அதிகரித்து வரும்  காற்று மாசு அளவுகளை கருத்தில் கொண்டு, இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதித்தது.

இந்நிலையில் தில்லியின் சாந்தனிசெளக் பகுதியில் உள்ள லலா லாஜ்பத் ராய் சந்தையில் மின்னணு பட்டாசு விற்பனையாளர்களில் ஒருவர் கூறும் போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாசு இல்லாத மின்னணு பட்டாசுகளுக்கு இளைஞர்களிடையே கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது. புகையில்லாமல் தீபாவளியை அவர்கள் மகிழ்வாக கொண்டாட முடியும் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்