இந்தியாவில் வேலையற்றோர் விகிதம் உயர்வு

இலக்கியா 2018-11-08 15:10:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களின்படி, அக்டோபர் திங்களில் இந்தியாவில் வேலையற்றோர் விகிதம் 6.9 விழுக்காட்டை எட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவில் பதிவாகியுள்ளது. கடந்த திங்களில் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை, 39 கோடியே 70 இலட்சம் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 2.4 விழுக்காடு குறைவாகும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புப் பற்றாக்குறை நிலைமை, கவலைப்படத் தக்கது என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்