ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு

பூங்கோதை 2018-11-20 11:41:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 5ஆவது ஆண்டு நிறைவுக்கான சர்வதேச மற்றும் பிரதேசக் கருத்தரங்கு அண்மையில் கொழும்பு நகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் இலங்கையின் பண்டாரநாயக சர்வதேசப் பிரச்சினைக்கான ஆய்வு மையம் இக்கருத்தரங்குக்குக் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. சீனா, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், வங்காளதேசம், சிங்கப்பூர், ஸ்பெயின், கிரேக்கம், கென்யா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 21 நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் இக்கருத்தரங்கில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினர்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு

இலங்கைக்கான சீனத் தூதர் ச்செங் சூயேயூவான் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு பெற்றுள்ள முக்கிய முன்னேற்றங்களை, சீனாவும் இலங்கையும் கூட்டாகக் கலந்தாய்வு செய்து, கூட்டாக உருவாக்கி, கூட்டாகப் பகிர்ந்து கொண்டு வருகின்றன. இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குச் சீனா பெரும் பங்காற்றியுள்ள அதேவேளை, இலங்கை மக்களுக்கு நலன்களையும் வழங்கியுள்ளது என்றார்.

மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் ஏற்படும் வளர்ச்சி சாதனைகள், அறைகூவல்கள், எதிர்பார்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இக்கருத்தரங்கில் பங்கெடுத்த நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள், உலகம், பிரதேசம் மற்றும் இலங்கையின் கோணங்களிலிருந்து தங்களின் கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்