ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு

பூங்கோதை 2018-11-21 10:13:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நவம்பர் 20ஆம் நாள் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. இதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமுற்றனர்.

தற்போது, இச்சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குச் செல்லும் முக்கிய பாதைகள் மூடப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவி வண்டிகள் மற்றும் காவற்துறை வாகனங்கள் மீட்புதவிப் பணிக்காக அங்கு சென்றுள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு

அண்மைக் காலமாக, ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. காபூலிலுள்ள கூட்ட இடம் ஒன்று நவம்பர் 12ஆம் நாள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பால் தாக்குதலுக்குள்ளானது. இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்