இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனச் சுரங்கத் தொடர்வண்டி பெட்டிகள்

வாணி ​ 2018-11-24 16:42:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மும்பையில் சேவை புரியும் சீனா தயாரிப்பு--சுரங்கத் தொடர்வண்டி

மும்பையில் சேவை புரியும் சீனா தயாரிப்பு--சுரங்கத் தொடர்வண்டி

சீனாவின் தாலியன் நகரில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது சுரங்கத் தொடர்வண்டி பெட்டிகள் வெள்ளோட்டத்திற்கு தயாராகவுள்ளது. இந்தியாவின் நாக்பூர் நகரில் பயன்படுத்தப்படும் இத் தொடர்வண்டி பெட்டிகள் எஃகுவினால் தயாரிக்கப்பட்டன. இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டராகும். அதன் பல்வகை தொழில் நுட்பக் குறியீடுகள் உலக முன்னணியில் உள்ளன.

பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நகரப் போக்குவரத்து நிலைமை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. ஆகவே, தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நகரங்களில் சுரங்க இருப்புப் பாதை கட்டியமைக்கப்பட்டு வருகிறது அல்லது கட்டியமைக்கப்படத் திட்டமிடப்பட்டு வருகின்றது.

அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின்படி, சீன-இந்திய வர்த்தகத் தொகை 8444 கோடி அமெரிக்க டாலராக வரலாற்றில் மிக உயர் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்