பாகிஸ்தானில் சீனத் தூதரகம் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

2018-11-24 16:48:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை

நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோழைத்தனமான இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீவிரவாதத்தின் எத்தகைய செயலையும் நியாயப்படுத்த முடியாது. கராச்சி தாக்குதலுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் விரைவில் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற தாக்குதல்கள், தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச

சமூகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை மேலும் வலுவாக்க மட்டுமே முடியும் என்றும் அதில் சுட்டிக்காப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்