கர்தர்பூர் ஷாகிப் புனிதப்பயண இடைவழி தொடக்க விழா – இந்தியா அமைச்சர்கள் பங்கேற்பு

பண்டரிநாதன் 2018-11-25 16:43:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற உள்ள கர்தர்பூர் ஷாகிப் புனிதப் பயண இடைவழியின் தொடக்க விழாவில் பங்கேற்க, இந்திய அரசு, 2 அமைச்சர்களை அனுப்ப உள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், மாநிலத் தேர்தல் தொடர்பாக பல நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டி இருந்த்தால், அவரால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. இருப்பினும், உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சீம்ரத் கௌர் பாதல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இத்துவக்க விழாவில் கலந்து கொள்வார்கள் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு சுஷ்மா ஸ்வராஜ் எழுதிய கடிதத்தில், இந்தியக் குடிமக்கள் சீக்கியர்களின் குருத்வாராவான கர்தார்பூர் ஷாகிப் தலத்துக்குச் சென்று வழிபாடு செய்வதை உறுதி செய்யும் வகையில், புனிதப்பயண இடைவழி அமைப்பதை பாகிஸ்தான் விரைவுபடுத்தும் என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்