வைவோ நிறுவனத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் நிலம் ஒதுக்கீடு

பண்டரிநாதன் 2018-11-26 18:56:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அலைபேசி தயாரிப்பு நிறுவனமான வைவோவுக்கு உத்தரப் பிரதேசத்தில் 68

ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வைவோ தனது உற்பத்தித் திறனை விரிவாக்கும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் வர்த்தக நகரான கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது. யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழிற்துறை வளர்ச்சி ஆணையத்தின் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அருண்வீர் சிங் கூறுகையில், வைவோ நிறுவனம், இப்பிரதேசத்தில் 25 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் வைவோ நிறுவனம் கட்டுமானப் பணியைத் துவங்க உள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் 20 ஏக்கர் நிலத்தில் இயங்கி வரும் வைவோ நிறுவனத்தில்

ஆண்டுக்கு 24 லட்சம் அலைபேசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்