பாகிஸ்தானில் 10ஆவது சர்வதேச பாதுகாப்பு பொருட்காட்சி தொடக்கம்

பண்டரிநாதன் 2018-11-27 18:33:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் கராச்சி பொருட்காட்சி மையத்தில் 10ஆவது சர்வதேச பாதுகாப்புப் பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பாதுகாப்பு ஏற்றுமதி முன்னேற்றத்தின் சங்க ஒருங்கிணைப்புத் துறை இயக்குநர் வஹீத் மும்தாஜ் திங்கள்கிழமை கூறுகையில், பாகிஸ்தான, சீனா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 522 பங்கேற்பாளர்கள், தங்களுடைய பாதுகாப்புத் தளவாடங்களை காட்சிக்கு வைக்க உள்ளனர் என்றார்.

மேலும், இப்பொருட்காட்சியில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவத் தளவாடமான

ஜேஎஃப்-17 மற்றும் முஷக் ஆகியவற்றை காட்சிக்கு வைக்க உள்ளது என்றும் அவர்

தெரிவித்தார். இப்பொருட்காட்சி நான்கு நாள்கள் நடைபெறுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்