ராஜபக்சே அரசு ஆட்சி அதிகாரத்தில் தொடர நீதிமன்றம் தடை

இலக்கியா 2018-12-05 09:36:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் ராஜபக்சேவும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஆட்சி அதிகாரத்தில் தொடரத் தடை விதித்து அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் மறுவிசாரணை வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சேவும் அவரது அரசும் ஆட்சியில் தொடர்வதை எதிர்த்து 122 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கில் வாதாடிய வழக்குரைஞர்கள் கூறுகையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டறிந்தது. பின்னர், தகுதியில்லாத ஒருவர் தலைமை அமைச்சராகவும், அமைச்சர்களாகவும் நீடித்தால் சீர்செய்யப்பட முடியாத சேதம் ஏற்படக் கூடும் என்று நீதிபதி கூறியதாகத் தெரிவித்தனர்.

மேலும், டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் விசாரணையில், ராஜபக்சேவும், 49 அமைச்சர்களும் நேரில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்