ரெபோ ரேட்டில் மாற்றல் இல்லை – இந்திய ரிசர்வ் வங்கி

பண்டரிநாதன் 2018-12-06 10:50:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரெபோ ரேட் என்று கூறப்படும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வர்த்தக வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அது 6.5 விழுக்காடாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை அறிவித்தது.

அதேபோல், ரிவர்ஸ் ரெபோ ரேட் எனப்படும் பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் 6.25 விழுக்காடு என்ற நிலையிலேயே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள்கள் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் இத்தகவலை வெளியிட்டது.

இதனிடையே, 2019-2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் விகிதம் 7.4 விழுக்காடு இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் 2.7-3.2 விழுக்காடு வரை பணவீக்கம் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்