தலைமை அமைச்சர் பதவியை ராஜபக்சே ராஜிநாமா

பண்டரிநாதன் 2018-12-15 16:21:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தலைமை அமைச்சர் பதவியை ராஜபக்சே ராஜிநாமா

இலங்கை தலைமை அமைச்சர் மஹிந்த ராஜபக்சே, தலைமை அமைச்சர் பதவியை சனிக்கிழமை காலை ராஜிநாமா செய்தார். ராஜபக்சே அரசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு, மேலும் தொடரும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவே, மீண்டும் தலைமை அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளார். இது தொடர்பாக, சிறிசேனா அவரிடம் தொலைபேசியில் வெள்ளிக்கிழமை உரையாடியதாக கொழும்பு பேஜ் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கும் வகையில் ராஜாபக்சே அப்பதவியிலிருந்து விலக உள்ளார் என்று அவரது மகன் நிமல் ராஜபக்சே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்