சீன-இந்திய பண்பாடு மற்றும் மக்கள் பரிமாற்றக் கூட்டத்துக்கு வாழ்த்து:ஷிச்சின்பிங்

இலக்கியா 2018-12-21 16:17:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா-இந்தியா இடையே பண்பாடு மற்றும் மக்கள் பரிமாற்றம் பற்றிய உயர் நிலை இயக்கமுறையின் முதலாவது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் கடிதம் மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.

சீரான சீன-இந்திய உறவு, இரு நாடுகளுக்கும் உலகிற்கும் நலன் விளைவிக்கும் என்று கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். சீனாவும் இந்தியாவும் இந்த உயர்நிலை இயக்கமுறையைப் பயன்படுத்தி, இரு நாட்டு மக்களின் மனப்பரிமாற்றத்தை அதிகரித்து, மேலும் நெருங்கிய கூட்டாளியுறவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்