சீனா-இந்தியா இடையே 270 கோடி மக்களிடையே மாபெரும் பரிமாற்றம் ஏற்படும்: வாங்யீ

மதியழகன் 2018-12-22 14:27:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா-இந்தியா இடையே பண்பாடு மற்றும் மக்கள் பரிமாற்றம் பற்றிய முதல் உயர்நிலைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில், அடுத்த கட்டப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, இரு தரப்பும், பல முக்கிய பொதுக் கருத்துக்களையும் எட்டியுள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 21ஆம் நாள் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை புதுதில்லியில் நடைபெற்ற சீன-இந்திய செய்தி ஊடக மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் பேசிய போது, வாங்யீ செய்தி ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது,

பண்பாடு மற்றும் மக்கள் பரிமாற்றம் என்ற உயர்நிலை முறையை அமைப்பதே, சீன-இந்திய உறவில் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. அதன் முதல் கூட்டம், நல்ல துவக்க நிலையை அடைந்துள்ளது. இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், சீன-இந்திய மக்களிடையேயான பரிமாற்றம், பெரும் வளர்ச்சியை நோக்கி செல்லும் போக்கில், 270 கோடி மக்களிடையிலான மாபெரும் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்