3ஆவது சீன-இந்திய ஊடக மன்றக் கூட்டம் துவக்கம்

வான்மதி 2018-12-22 16:14:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

3ஆவது சீன-இந்திய ஊடக மன்றக் கூட்டம் துவக்கம்

3ஆவது சீன-இந்திய ஊடக மன்றக் கூட்டம் டிசம்பர் 21ஆம் நாள் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

அப்போது வாங்யீ பேசுகையில், சீன-இந்திய ஊடகங்களிடையே புரிந்துணர்வை அதிகரிப்பதற்கு இம்மன்றம் முக்கிய பங்காற்றியுள்ளதோடு, இருதரப்பு மானுட பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான முக்கிய சின்னமாகவும் மாறியுள்ளது. இருநாட்டுத் தலைவர்கள் ஊடகத் தொடர்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சீன-இந்திய ஒத்துழைப்புக்கு நட்பார்ந்த பொது கருத்துக்களை உருவாக்க எங்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர். ஊடகப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொது மக்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து, சீன-இந்திய ஒத்துழைப்பின் பன்முக வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று கூறினார். மேலும், ஊடகப் பணியாளர்கள் இருநாடுகளின் வளர்ச்சி பற்றிய கதைகளைச் சொல்லிக் கொடுத்து, சீன-இந்திய நட்புறவு தொடர்பான நல்ல செய்திகளைப் பரவல் செய்து, உண்மையான சீனா, உண்மையான இந்தியா மற்றும் தொடர்ந்து முன்னேறி வரும் இருநாட்டுறவை இருநாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வெளிக்காட்ட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்