கொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பூங்கோதை 2019-01-02 10:50:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2018ஆம் ஆண்டு, கொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது, 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட 13.4 விழுக்காடு அதிகமாகும். இதில், சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுடன் கட்டப்பட்ட கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில், இந்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று இலங்கை தேசிய துறைமுக நிர்வாகத் துறை ஜனவரி முதல் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் வழியாக, சீன-இலங்கை துறைமுக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி வருகின்றன. கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் 2014ஆம் ஆண்டு இயங்கத் துவங்கியது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்