இலகு ரயில்பெட்டி இடைவழி அமைக்க இலங்கை ஒப்புதல்

பண்டரிநாதன் 2019-01-05 18:30:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைத் தலைநகர் கொழும்புவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இலகுவான ரயில்பெட்டி இடைவழி அமைப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கல சமரவீராவின் முன்மொழிவைத் தொடர்ந்து, இக்கட்டுமானப் பணிக்கு 180 கோடி டாலர் கடன் தொகையை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இருப்புப்பாதை கட்டுமானப் பணி இவ்வாண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மொத்த தூரம் 17 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்