ஆசிய கால்பந்து கோப்பை – இந்தியா வெற்றி

பண்டரிநாதன் 2019-01-07 16:18:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நான்கிற்கு ஒன்று (4-1) என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியைத் தோற்கடித்தது. 1964ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தொடரில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்தார். சர்வதேசத் தொடரில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.

இப்போட்டித் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இப்பிரிவில் பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்