பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த மோடி, புதின் சம்மதம்

பண்டரிநாதன் 2019-01-08 16:02:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதினும், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், சர்வதேச அளவில் நிகழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் என்று கிரெம்ளின் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மோடிக்கு புதின் வாழ்த்து தெரிவித்தார். இவ்வாண்டு செப்டம்பரில் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்கு மோடிக்கு அவர் அழைப்பையும் விடுத்துள்ளார் என்று அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்