கடந்த ஆண்டு நேபாளத்தில் 11 லட்சம் சுற்றுலாப் பயணிகள்

பண்டரிநாதன் 2019-01-09 16:57:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர் என்று அந்நாட்டு சுற்றுலா வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சென்ற ஆண்டு இறுதிவரை 11 லட்சத்துக்கு 73 ஆயிரத்து 72 பேர் நேபாளத்தில் பயணித்துள்ளனர்.

நேபாளத்தின் வரலாற்றில் ஓர் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பயணம் மேற்கொண்டது இதுவே முதன்முறையாகும். இவர்களில் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் மிக அதிகம். மொத்த எண்ணிக்கையில் இரு நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 30 விழுக்காடு ஆகும். இந்தியா, சீனாவைத் தொடர்ந்து, அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

“விசிட் நேபாள் 2020” என்ற பிராசாரத்தை நேபாளம் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு தகவல் வந்துள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்