இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் – இந்தியாவும் நைஜீரியாவும் கையெழுத்து

பண்டரிநாதன் 2019-01-11 15:44:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவும், நைஜீரியாவும் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் அடுத்த வாரம் கையெழுத்திட உள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவை தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்று நைஜீரியாவின் உள்ளூர் ஊடகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை நிறைவேற்றும் பணியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு விமான சேவைத் துறை அமைச்சர் ஹதி சிரிகா தலைமையிலான பிரதிநிதிகள் இந்தியாவுக்குச் செல்ல உள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையே, தற்போது, துபை மற்றும் எத்தியோப்பியா வழி 4 விமானங்கள் சென்று வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்