சீனாவும் இந்தியாவும் மின்னணு வாகன ஒத்துழைப்பு

2019-01-13 17:09:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவும் இந்தியாவும் மின்னணு வாகன ஒத்துழைப்பு

தனியார் மின்னணு வாகனச் சங்கமான ‘சீனா இவி100’, கடந்த 11 முதல் 13ஆம் தேதி வரையில் 5ஆவது சீன இவி100 மன்றக் கூட்டத்தை பெய்ஜிங்கில் நடத்தியது. இம்மன்றக் கூட்டத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியா அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் முதன்மை ஆலோசகர் அனில் ஸ்ரீவஸ்தவா தலைமையில், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு இதில் கலந்து கொண்டது. ‘உலக பூஜியம் வெளியேற்றம், அனைத்தும் மின்னணு வாகனங்கள்’ என்ற தலைப்பிலான மாநாட்டுக் கூட்டத்தில் அனில் ஸ்ரீவஸ்தவா உரையாற்றினார். பின்னர், ‘சீனா இவி100’ சங்கத்தின் தலைவர் சென் சிங் டையையும் அவர் சந்தித்தார்.

கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், “இந்திய அரசின் கொள்கைப்படி, உலக சுற்றுச்சூழலைப் பேணுவதில் இந்தியா பொறுப்பேற்றுள்ளது. புதிய ஆற்றல் துறை வளர்ச்சிக்கும், புதிய ஆற்றல் போக்குவரத்துக்கும் ஊக்குவிப்பு அளித்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மின்னணு வாகன இயக்கத்தை நனவாக்க வேண்டும் என்று இந்தியா இலக்கு கொண்டுள்ளது.”என்றார்.

சென் சிங் டை உடனான சந்திப்பின்போது, “இரு நாடுகளின் சந்தைகளைக் கருதும்போது, மின்னணு வாகனத்துக்கான மிகப் பெரிய ஒத்துழைப்பு ஆற்றல் உள்ளது என்றார். இரு நாடுகளின் மின்னணு வாகன தொழில்கள், மேலதிக பரிமாற்றம் மேற்கொண்டு, அதிகாரப்பூர்வ பரிமாற்ற முறையை உருவாக்க வேண்டும் என்று ஸ்ரீவஸ்தவா முன்மொழிந்தார். மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த மின்னணு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சந்தித்து, இரு தரப்பு ஒத்துழைப்பு சாத்தியத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முன்மொழிவையும் அவர் வைத்தார்.

சென் சிங் டை கூறுகையில், “சீனாவின் மின்னணு வாகனத் தயாரிப்பு தொழில் நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான நாடாகும். இந்தியாவின் மின்னணு வாகனத் துறையில் பங்கேற்கவும் முதலீடு செய்யவும் சீன தொழில் நிறுவனங்கள் முன்வருவதை வரவேற்கிறேன்.”என்றார்.

3 நாள்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாருதி சுஸுகி, டாடா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்