காற்று மாசுபடுவதைத் தடுக்க 5 ஆண்டு திட்டம் இந்தியா வெளியீடு

வாணி 2019-01-14 16:06:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் 5 ஆண்டு திட்டத்தை மேற்கொள்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டப்படி, 2024ஆம் ஆண்டுக்குள் மிகவும் மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 102 நகரங்களில் காற்றின் தூய்மைக் கேட்டின் அளவு 20 முதல் 30 விழுக்காடு வரை குறைக்கப்படும்.

இந்திய தலைநகர் புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றுத்தர குறியீடு 414 பதிவாகி, மிகவும் மோசமான நிலையை எட்டியதாக இந்திய மத்திய மாசுபாட்டுக் கட்டுபாட்டு ஆணையம் தெரிவித்தது.

அரசின் திட்டம் ஒரு வழிகாட்டு ஆவணமாகும் என்றும், இந்த நடவடிக்கையில் பங்கெடுக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டல் சக்தியாக இருக்கும் என்றும் நம்புவதாக இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளூர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வாகனப் பயன்பாடு, தொழிற்துறை மற்றும் அனல்மின் நிலைய வெளியேற்றம், வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களை எரிப்பது, ஆகியவற்றைக் குறைப்பது இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்