இந்தியச் சுற்றுலாப் பணியாளர்கள் சங்க புத்தாண்டு விருந்தில் சீனத் தூதர் பங்கேற்பு

ஜெயா 2019-01-16 10:38:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியச் சுற்றுலாப் பணியாளர்கள் சங்க புத்தாண்டு விருந்தில் சீனத் தூதர் பங்கேற்பு

இந்தியச் சுற்றுலாப் பணியாளர்கள் சங்க புத்தாண்டு விருந்தில் சீனத் தூதர் பங்கேற்பு

இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ சாவ்ஹுய் புதுதில்லியில் இந்தியச் சுற்றுலாப் பணியாளர்கள் சங்கத்தின் புத்தாண்டு விருந்தில் 15ஆம் நாள் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், கடந்த ஆண்டு, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சமாகும். இரு தரப்புச் சுற்றுலா ஒத்துழைப்பு உள்ளார்ந்த ஆற்றல் மிக பெரியதாக இருப்பதை இது காட்டுகிறது என்று கூறினார்.

புத்தாண்டில், இந்தியத் தரப்புடன் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொண்டு, இரு நாட்டுச் சுற்றுலா ஒத்துழைப்புக்கு புதிய உந்து ஆற்றலை வழங்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிதாகப் பங்காற்றுவதை எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்