​சீனத் தூதர் மற்றும் இலங்கை உள்துறை அமைச்சர் சந்திப்பு

தேன்மொழி 2019-01-17 14:54:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைக்கான சீனத் தூதர் ட்செங் சுயெ யுவன், இலங்கை உள்துறை மற்றும் உள்ளூர் அலுவல் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனாவை 15-ஆம் நாள் செவ்வாய்கிழமை கொழும்புவில், சந்தித்து பேசினார். மக்கள் வாழ்க்கை ஆதாரத் துறையிலான ஒத்துழைப்பு, மக்களிடையேயான தொடர்பின் வசதிமயமாக்கம் முதலியவை குறித்து, இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கை சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் பேராதரவுக்கு, அபேவர்தனா நன்றி தெரிவித்தார்.

தவிர, அந்நாட்டு உள்துறை வாரியங்கள், மேலும் நட்பார்ந்த வணிகச் சூழலை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்