70 ஆவது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடியது

பண்டரிநாதன் 2019-01-27 15:57:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

70 ஆவது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடியது

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தையொட்டி நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி தில்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

70 ஆவது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடியது

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இந்த அணிவகுப்பில் ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் விதம் பாதுகாப்புச் சாதனங்களும் முன்னேறிய பாதுகாப்புத் தொழில்நுட்ப மேடைகளும், வேறுபட்ட கலாசாரங்களை பிரதபலிக்கும் ஊர்திகளும் பங்கேற்றன.

70 ஆவது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடியது

மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினம் இவ்வாண்டு குடியரசு தினத்தின் முக்கிய கருப்பொருளாகும். அதனால், அவரது வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் 22 மாநிலங்கள் மற்றும் யுனியன்பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

70 ஆவது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடியது

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்