2025-க்குள் காசநோய் ஒழிப்பு – மோடி திட்டவட்டம்

பண்டரிநாதன் 2019-01-28 17:12:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும் என்று இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மதுரையில் தெரிவித்தார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

தவிரவும், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதி சிறப்பு மருத்துவனைப் பிரிவுகளையும் அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், புது தில்லியில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவனை தரமான சிகிச்சைக்குப் பெயர் போனது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களுக்கு அத்தகைய சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில் 1,320 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நோய் தடுப்பு மையங்களுக்கான தொழில்நுட்பத்தையும், தேவையான நிதியையும் மத்திய அரசு அளித்து வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. காசநோய் இல்லா சென்னை என்ற திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் சுகாதாரத் துறைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு புரிந்து வருகிறது என்றார்.

பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றி அவர் கூறும்போது, உலகிலேயே மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டம் இதுவாகும். இதன் மூலம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1.57 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்