2019ஆம் ஆண்டு இந்திய-சீன ஒத்துழைப்பு நெருக்கம்:சீனாவுக்கான இந்தியத் தூதர்

இலக்கியா 2019-01-28 18:43:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு இந்திய-சீன ஒத்துழைப்பு நெருக்கம்:சீனாவுக்கான இந்தியத் தூதர்

பெய்ஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் 70ஆவது குடியரசுத் தினக் கொண்டாட்டம் ஜனவரி 28ஆம் நாள் நடைபெற்றது. சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி, சீன வெளியுறவு அமைச்சரின் துணையாளர் ச்சாங் ஹான் ஹுய் முதலியோர் இதில் கலந்து கொண்டனர்.

விக்ரம் மிஸ்ரி உரை நிகழ்த்துகையில், 2018ஆம் ஆண்டில் மோடி, ஷிச்சின்பிங் ஆகியோர், வூ ஹானில் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு, இரு நாட்டு நெருங்கிய கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கான முக்கிய மைல் கல்லாகத் திகழ்கிறது. கடந்த டிசம்பர் நடைபெற்ற இந்திய-சீன உயர் நிலைக் கூட்டத்தில், சுற்றுலா, விளையாட்டு, யோகா, பாரம்பரிய மருத்துவம், திரைப்படம், கல்வி, மாநிலப் பரிமாற்றம் முதலிய துறைகளில் மேலதிக ஒத்துழைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்