இலங்கையின் காலணி, தோல் பொருள் ஏற்றுமதி 300 % அதிகரிப்பு

பண்டரிநாதன் 2019-01-29 15:54:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் காலணி மற்றும் தோல் பொருள் துறையின் ஏற்றுமதி வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 300 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு தொழில்துறை மற்றும் வணிக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் காலணி மற்றும் தோல் பொருள் ஏற்றுமதியினால் 11.9 கோடி டாலர் வருமானம் அதிகரித்துள்ளது என்றும் இத்துறை மூலம் ஏறத்தாழ 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வருமான அதிகரிப்பில், 48 விழுக்காடு வியட்நாமில் இருந்தும், 18 விழுக்காடு பிரிட்டனில் இருந்தும் கிடைத்துள்ளது.

இலங்கையின் காலணி மற்றும் தோல் பொருள் தயாரிப்புச் சங்கத்தின் தலைவர் நிமலசிரி கூறுகையில், “பொருள் குவிப்புக்கு எதிரான விதிமுறைகளை தொழில்துறை மற்றும் வணிக அமைச்சகம் இத்துறையில் அறிமுகப்படுத்தியது. இது, இத்துறைக்கு அமைச்சகம் ஆற்றிய பெரிய சேவை ஆகும்,” என்றார்.

மேலும், “எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகமான சாதனைகளைப் பெறுவதற்கான ஆற்றல் இத்துறைக்கு உண்டு,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்