பூட்டான் தலைமையமைச்சர்-இந்தியாவுக்கான சீனத் தூதர் சந்திப்பு
பூட்டான் தலைமையமைச்சர் லோதெய் த்ஷெரிங்கும், பூட்டானில் பயணம் மேற்கொண்ட இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ச்சோ ஹுய்யும் ஜனவரி 31ஆம் நாள் சந்திப்பு நடத்தினர். லோதெய் த்ஷெரிங் கூறுகையில், சீனாவுடனான நட்புறவுக்கு பூட்டான் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரே சீனா என்ற கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி, சுற்றுலாத் துறை உள்ளிட்ட இரு தரப்பின் பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நட்புக் கலந்தாய்வு மூலம் எல்லை பிரச்சினையை வெகுவிரைவில் தீர்க்க, பூட்டான அரசு விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
பூட்டான் பயணத்தின் போது, லுவோ ச்சோ ஹுய், அந்நாட்டின் 4ஆவது மற்றும் 5ஆவது மன்னர்களையும், வெளியுறவு அமைச்சர் டண்டி டோர்ஜியையும் சந்தித்து, இரு தரப்பின் உறவு, பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.