இலங்கையில் டெங்கு நோய்க்கு ஒழிப்புத் திட்டம் தொடக்கம்

மதியழகன் 2019-02-15 10:29:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொசு மூலம் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், இலங்கையில் டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் 14ஆம் நாள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது என்று இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பாஹா, களுத்தர, யாழ்பாணம் ஆகிய பகுதிகளில், இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் டெங்கு ஒழிப்புத் திட்டத்துக்கு 650க்கும் அதிகமான பணிக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று இந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மட்டும், இலங்கை தீவில் 3,700 பேருக்கு டெங்கு நோய் தொற்றியதோடு, 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்