அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தைக்கு மனநிறைவின்மை:ஆப்கான் அதிகாரம்

வாணி 2019-03-15 16:13:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானிலுல்ள தலிபான் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு ஆப்கான் அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா முஹிப் மனநிறைவின்மை தெரிவித்துள்ளார். 14ஆம் நாள் வாஷிங்டனில் செய்தியாளரிடம் பேசிய போது, தற்போதைய பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தானுக்கு அமைதியைக் கொண்டு வர முடியாது என்று அவர் கூறினார்.

இப்பேச்சுவார்த்தை தலிபானின் சட்டப்பூர்வத் தன்மையை அதிகரிப்பதோடு ஆப்கான் அரசின் சட்டப்பூர்வத் தன்மையைக் குறைத்துள்ளது என்றும் இப்பேச்சுவார்த்தையில் சில நுணுக்கமான தகவல்களை ஆப்கான் அமைதி விவகாரத்துக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஹலிரசாத் வேண்டுமென்றே மூடிமறைத்துள்ளார் என்றும் அவர் குறை கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்