ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

சரஸ்வதி 2019-05-10 10:13:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாடு மே திங்கள் 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்க உள்ளது. இதில், பாகிஸ்தான் தேசிய வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வ துறையின் 3 நிபுணர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இஸ்லாமாபாத் அருங்காட்சியகத்தின் 19 அரிய பொருட்களும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்ட உள்ளன. இது குறித்து இந்த துறையின் பழம் பொருளாராய்ச்சி அருங்காட்சியக இயல் மையத்தின் செயல் தலைமை இயக்குநர் தாஹிர் சையித் 9ஆம் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

அப்போது, ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கு சீனா அரசு வழங்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மாநாடு இருக்கும். ஆசியாவின் பல்வேறு நாடுகள் நேரடியான பரிமாற்றம் மேற்கொண்டு, தற்போதைய பண்பாட்டு ஒத்துழைப்பை வளர்த்து விரைவுபடுத்தலாம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, பட்டுப் பாதையில் பல்வகை பண்டைகால நாகரிகங்களுக்கிடையேயான பரிமாற்றத்தின் தொடர்ச்சியாகும். ஆசியா நாடுகள் இதன் மூலம் மேலும் நெருக்கமாகத் தொடர்பு மேற்கொண்டு, இறுதியில், ஆசியாவின் பல்வேறு நாடுகளிடையில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை இது விரைவுபடுத்தும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்