குன்மிங் நகரில் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி தொடக்கம்

சோமசுந்தரம் 2019-06-12 18:48:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குன்மிங் நகரில்  தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான  வர்த்தக  மற்றும் முதலீட்டு  கண்காட்சி தொடக்கம்

குன்மிங் நகரில் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி தொடக்கம்

சீனாவின் வசந்த நகரம் என்று அழைக்கப்படும் குன்மிங் நகரில் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு பொருட்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 3,348 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன.
தென்மேற்கு சீனாவின் யுன்னன் மாநிலத் தலைநகரான குன்மிங்கில் நடைபெறும் இப்பொருட்காட்சியில் செயற்கை நுண்ணறிவு(AI), மெய்நிகர் உண்மை (VR) போன்ற டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குன்மிங்கிலுள்ள சர்வதேச காட்சி மையம் ஒன்றில் நடைபெறும் நடப்பு பொருட்காட்சியில் 74 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து ஆறு பிரதான கண்காட்சிப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி வெளிநாட்டு நிறுவனங்கள் தான் என்று தெரிகிறது.
மேலும் 17 காட்சி அரங்குகளில் 7500 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய அரங்கங்கள் பல வெளிநாட்டு வணிகர்களை ஈர்த்துள்ளன. இந்தியா பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், தங்கள் நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்களை, காட்சி அரங்குகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்