சீன-இந்திய மொழிக் கல்விப் பரிமாற்றக் கருத்தரங்கு

ஜெயா 2019-08-12 10:04:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீன-இந்திய மொழிக் கல்விப் பரிமாற்றக் கருத்தரங்கு 11ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இரு நாடுகளின் கல்வித் துறையைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

கன்ஃபியூசியஸ் கழகத்தின் தலைமையகத்தின் துணைப் பொதுச் செயாலளர் மா ஜியான்ஃபெய் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தலைவர் ஒய்.எஸ்.அர்.மூர்த்தி கூறுகையில், சீனாவும் இந்தியாவும் பண்டைய நாகரிகங்களைக் கொண்ட நாடுகளாகும். கல்வி, பொருளாதாரம், மதம், மானிடவியல் முதலிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகம். மொழிப் பண்பாட்டுப் பரிமாற்றம் மூலம் இரு நாட்டு மக்கள் குறிப்பாக, இரு நாட்டு இளைஞர்களுக்கு இடையில் பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வை உறுதிப்படுத்தி ஆழமாக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்