4ஆவது சீன-இந்திய உயர்நிலை ஊடக மன்றக் கூட்டம்

வான்மதி 2019-08-13 17:02:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா-இந்தியா இடையே 4ஆவது உயர்நிலை ஊடக மன்றக் கூட்டம் ஆகஸ்டு 12ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்தியாவுக்கான சீனாவின் முன்னாள் தூதர் இக்கூட்டத்தில் பேசுகையில், சீனாவும் இந்தியாவும் மலைகள் மற்றும் ஆறுகளால் இணைக்கப்படுகின்றன. இருதரப்பு நட்புறவுக்கு ஆழ்ந்த அடிப்படை உண்டு. இருநாடுகளின் நட்பார்ந்தப் பரிமாற்றத்துக்கு எல்லை இல்லை. இருநாட்டு ஊடகங்கள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்புறவின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் கூறுகையில், நிலையான இருதரப்புறவு, இருநாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்காலத்தில் இருநாட்டு மக்களின் பரிமாற்றத்தை அதிகரிக்கும் விதமாக இருதரப்பும் மானுட பண்பாட்டியல் துறையில் மேலதிக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகத் தொடர்பின் மூலம் இருதரப்புறவை மேம்படுத்த வேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்