இந்தியாவில் கடும் மழை:குறைந்தது 200 சாவு

பூங்கோதை 2019-08-14 16:54:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில நாட்களாக, இந்தியாவின் பல இடங்களில் கடும் மழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மண் அரிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. இதுவரை, இதில் குறைந்தது 200 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர் என்று இந்திய செய்தி ஊடகங்கள் ஆகஸ்டு 13ஆம் நாள் தெரிவித்தன.

மேலும், இந்தியா டுடே என்னும் செய்தி ஊடகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மிக கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்தில் குறைந்தது 85 பேர் உயிரிழந்தனர். கர்நாடக, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் குறைந்தது 115 பேர் உயிரிழந்தனர். தற்போது, இப்பிரதேசங்களிலுள்ள மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்