வங்காளத் தேச இளைஞர்களின் சீனப் பயணம் 25இல் துவக்கம்

இலக்கியா 2019-08-24 15:29:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

150 பேர் கொண்ட வங்காளத் தேச இளைஞர்கள் பரிமாற்றக் குழு, சீனாவில் 12 நாட்கள் நீடிக்கும் நட்புப் பயணத்தை 25ஆம் நாள் முதல், மேற்கொள்ளவுள்ளது. இப்பயணக் குழுவின் துவக்க விழா, 22ஆம் நாள் வங்காளத் தேசத்திலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. சீனத் தூதர் லீ ஜி மிங் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், வங்காளத் தேச இளைஞர்கள், இப்பயணத்தின் போது, சீனப் பாரம்பரியப் பண்பாட்டை உணர்ந்து கொண்டு, இரு நாட்டு நட்பின் தூதர்களாக மாற வேண்டுமென விருப்பம் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2016ஆம் ஆண்டில் வங்காளத் தேசத்தில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற ரீதியிலான முக்கிய சாதனைகளில், இந்நட்புப் பயணமும் ஒன்றாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்