இலங்கையின் தமிழ் ஊடகப் பிரதிநிதிகள் குழு சீனாவில் பயணம்

இலக்கியா 2019-09-02 09:17:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையிலுள்ள சீனத் தூதரகம், சீன ஊடகக் குழுமம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில், இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்களின் 5 பிரதிநிதிகள், ஆக்ஸ்ட் 31ஆம் நாள் பெய்ஜிங் வந்தடைந்தனர். வரும் 10 நாட்கள் பயணத்தில், அவர்கள் பெய்ஜிங், ஷி அன், குவென் மிங் முதலிய நகரங்களில் நட்புப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்கள், இலங்கையின் காலைக்கதிர், கேப்பிட்டல் டி வி, தமிழன் உள்ளிட்ட புகழ் பெற்ற தமிழ் ஊடகங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள், சீன ஊடகக் குழுமம், வெளியுறவு அமைச்சகம், வேளாண் தொழல் நுட்ப முன்மாதிரி மண்டலம் முதலிய இடங்களில் பயணம் மேற்கொண்டு, கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்