இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற கல்வியியல் கருத்தரங்கு

சிவகாமி 2019-09-18 11:24:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மாறி வரும் நூலகப் புத்தாக்கம் மற்றும் சீனக் கல்வியியல் மூலவளத்தின் பயன்பாட்டு மதிப்பு என்னும் கல்வியியல் கருத்தரங்கு இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. இந்திய உயர் கல்வி நிலையங்கள் 17ஆம் நாள், சிந்தனை கிடங்குகள், நூலகத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் கவுன்சிலர் ஜாங் ஜியான்க்சின் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இந்தியாவும் சீனாவும், ஆசியப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் முக்கிய நாடுகளாகத் திகழ்கின்றன. இந்தியாவிலுள்ள சீன அறிஞர்கள், இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று சீனத் தேசிய சிந்தனைக் கட்டமைப்பின் சர்வதேசப் பிரிவு துணைத் தலைவர் குவன் சியாவ்லன் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்