சீன-மாலத் தீவு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

பூங்கோதை 2019-09-21 15:05:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மாலத் தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் செப்டம்பர் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ பேசுகையில், மாலத் தீவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பை முன்னேற்றி, மாலத் தீவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க சீனா விரும்புகிறது. மேலும், மக்கள் வாழ்வு, கடல் போன்ற துறைகளிலான ஒத்துழைப்புகளை இரு நாடுகளும் ஆழமாக்கி, இளைஞர்கள், சுற்றுலா, விளையாட்டு, நட்பார்ந்த நகரங்கள் உள்ளிட்ட மானுட பண்பாட்டுப் பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அப்துல்லா ஷாஹித் கூறுகையில், ஒரே சீனா என்ற கோப்பாட்டில் மாலத் தீவு அரசு உறுதியாக ஊன்றி நின்று வருகிறது. வலிமைமிக்க இரு தரப்புறவை மேலும் முன்னேற்றுவதற்கு மாலத் தீவு பாடுபடும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்