கண்டியில் சீன உதவியுடன் நீர் வினியோகத் திட்டப்பணி தொடக்கம்

வான்மதி 2019-09-22 16:14:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் கண்டி நகரின் வடக்கு பகுதியில், சீன நீர் மின் கட்டுமானக் குழும நிறுவனம் பொறுப்பேற்றுள்ள நீர் வினியோகத்துக்கான பன்னோக்கு திட்டப்பணியின் துவக்க விழா 21ஆம் நாள் அந்நகரில் நடைபெற்றது.

இலங்கை தலைமை அமைச்சர் விக்ரமசிங்கே, இலங்கைக்கான சீனத் தூதர் சேங் சுயேயுவான், அந்நாட்டின் தொடர்புடைய அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், உள்ளூர் மக்கள் உள்பட சுமார் 1000 பேர் இத்துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விக்ரமசிங்கே உரை நிகழ்த்துகையில், சீனாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இருதரப்பும் நட்பார்ந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டப்பணி இலங்கையில் மிகப் பெரிய குழாய்களின் கட்டமைப்பு கொண்ட நீர் வினியோகத் திட்டப்பணியாகும். இது, கண்டியிலுள்ள சுமார் 5 லட்சம் பேர் நீண்டகாலத்திற்கு எதிர்பார்த்துள்ள பொது நலத் திட்டப்பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்