9வது சீன-இந்திய நிதி உரையாடல்

பூங்கோதை 2019-09-25 20:13:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

9வது சீன-இந்திய நிதி உரையாடல் செப்டம்பர் 25ஆம் நாள் இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. சீனத் துணை நிதி அமைச்சர் ஸோவ் ஜாயீ, இந்திய நிதி துறையின் பொருளாதார விவகாரச் செயலாளர் அதனு சக்ரவர்த்தி ஆகிய இருவரும் இந்த உரையாடலுக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினர். மேலும், இரு நாடுகளின் நிதி, வெளியுறவு, நாணயக் கண்காணிப்பு ஆகிய வாரியங்களைச் சேர்ந்த உயர் நிலை அதிகாரிகள் இதில் பங்கெடுத்தனர். ஒட்டுமொத்த பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் கொள்கை, பல தரப்புக் கட்டுக்கோப்புக்குளான ஒத்துழைப்பு, இரு தரப்பு முதலீடு, நாணய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தரப்பும் ஆழ்ந்த விவதாம் நடத்தி, பல பொதுக் கருத்துக்களை உருவாக்கியுள்ளன.

அதற்குப்பிறகு, 9வது சீன-இந்திய நிதி உரையாடலுக்கான கூட்டறிக்கையை இரு தரப்பும் வெளியிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்