சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்தியாவில் கொண்டாட்ட நிகழ்ச்சி

பூங்கோதை 2019-09-27 20:22:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி செப்டம்பர் 26ஆம் நாளிரவு இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு துறையினர்கள், இந்தியாவுக்கான பல்வேறு நாட்டுத் தூதர்கள் மற்றும் தூதாண்மை அதிகாரிகள், இந்தியாவிலுள்ள சீனச் செய்தி நிறுவனங்கள், சீன முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள சீன மாணவர்கள், இந்திய வாழ் சீனர்கள் உள்ளிட்ட 800க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுங் வெய்தொங் கூறுகையில், சீன-இந்திய உறவு உலகத்தில் செல்வாக்கு மிக்கது. 2020ஆம் ஆண்டு, சீன-இந்தியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். நாம் இதை வாய்ப்பாக கொண்டு, சீன-இந்திய நெருங்கிய கூட்டாளி உறவை மேலும் முன்னேற்ற வேண்டும். மேலும், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, நேர்மை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட புதிய சர்வதேச உறவை உருவாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு, ஆசியா மற்றும் உலகத்துக்கு மேலும் இனிமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்