2019ஆம் ஆண்டு சீன-இந்திய இளைஞர் உரையாடல்

சரஸ்வதி 2019-09-29 11:20:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு சீன-இந்திய இளைஞர் உரையாடல் ஒன்றைச் சீன ஊடகக் குழுமம், செப்டம்பர் திங்கள் 28ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடத்தியது. சீனா மற்றும் இந்தியாவிலிருந்து 8 சிறந்த இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாடினர். “ஒன்றிடமிருந்து மற்றொன்று என்ன கற்றுக்கொள்ளலாம்? ”என்பது இதன் தலைப்பாகும்.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய் தோங், இவ்வுரையாடலை வாழ்த்தி காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில், சீன-இந்திய உறவு சீராக வளர்ந்து வருகிறது. சீரான இரு தரப்புறவு, இரு நாடுகளின் இளைஞர்களுக்கு மேலும் பரந்த பரிமாற்ற மேடையை வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கான இந்தியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் தகவல் அலுவலர் பிரசன்னா ஸரீவஸ்தவா இந்த உரையாடலில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். இந்த உரையாடலில் கலந்துகொண்ட இரு நாட்டு இளைஞர்களின் சிறந்த விவாதம், என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. தற்போது, இத்தகைய உரையாடல், இரு நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்