இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் – 35 பேர் போட்டி

பண்டரிநாதன் 2019-10-08 16:31:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் நவம்பர் 16ஆம் நடைபெற இருக்கும் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று திங்கள்கிழமை அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை கடைசி நாளாகும்.

ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை பொதுமக்கள் கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் வேட்பாளர் அனுரா குமாரா திசநாயகா உள்ளிட்டோர் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஆதரவாளர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும், தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்று 35 வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷ்பிரியா கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்