தமிழ் ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த தமிழ் பேசும் சீனர்களின் சிறப்பு நிகழ்ச்சி

கலைமணி 2019-10-10 11:00:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய தலைவர்களின் 2ஆவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில் பங்கேற்க சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தியாவின் தமிழகத்திற்கு வர உள்ளார்.

இந்தப் பயணத்தை முன்னிட்டு,சீன ஊடக குழுமத்தால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி,தூர்தர்ஷன் பொதிகை மற்றும் புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

மேலும்,தினமணி, டாப் நியூஸ், நியூஸ் டாக் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் மற்றும் கைப்பேசி செயலிகளிலும் இந்த சிறப்பு காணொளி நிகழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

சீன ஊடக குழுமத்தின் தமிழ்ப் பிரிவின் அறிவிப்பாளர்களான கலைமகள்,நிலானி,பூங்கோதை ஆகிய மூவரும்,தூர்தர்ஷன் பொதிகை மற்றும் புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சிகளுக்குச் சிறப்பு நேர்காணல்களை அளித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்