பெய்ஜிங்-காத்மாண்டு நேரடி விமானப் போக்குவரத்து திறப்பு

2019-10-28 15:46:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 27ஆம் நாள் காலை 9 மணியளவில், இமய மலை எனும் விமான சேவை நிறுவனத்தைச் சேர்ந்த பயணியர் விமானம் ஒன்று, நேபாளத் தலைநகர் காத்மாண்டின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஐந்தரை மணி நேரத்திற்குப் பிறகு, சீனாவின் பெய்ஜிங் மாநகரின் தா சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சீன மற்றும் நேபாளத் தலைநகர்களிடையே நேரடி பறத்தல் நெறி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதை இது கோடிட்டுக்காட்டுகின்றது.இது பற்றி, முதல் விமான பறத்தல் விழாவில் பேசிய நேபாளத்துக்கான சீனத் தூதர் ஹோ யன் சி, பெய்ஜிங்-காத்மாண்டு நேரடி பறத்தல் நெறி திறந்து வைக்கப்பட்டது, இரு நாட்டு விமானப்பயண சேவைத் துறையின் ஒத்துழைப்பு, புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.

நேபாளத்துக்குச் செல்லும் மேலதிக சீன மக்களுக்கு வசதி அளிக்கும் பொருட்டு, சீனாவின் ட்சாங் ஷா, குய் யாங், நன் ட்சாங், சுங் சிங், ட்சென்சன், லாசா மற்றும் அலி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி பறத்தல் நெறியை இமய மலை விமானச் சேவை நிறுவனம் தொடங்கவுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்