சீனாவின் உரிமைப் பிரதேசத்தை இந்தியா தனது நிர்வாகத்துக்குள் சேர்பதற்கு எதிர்ப்பு: சீனா

வாணி 2019-10-31 18:56:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் 31ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவற்றுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவி ஏற்றனர். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கெங்சுவாங் வியாழக்கிழமை இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில்,

உள்நாட்டு சட்டத்தைத் திருத்தி, நிர்வாக பிரதேசத்தை உருவாக்கும் இந்திய தரப்பின் ஒரு சார்பு நடவடிக்கை. இது சீனாவின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாக உள்ளது. இதற்குச் சட்டத் துறை ஆதரவு கிடைக்காது. தொடர்புடைய பிரதேசங்கள் சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உண்மையையும் மாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டு எல்லைப் பகுதியின் அமைதியைப் பேணிக்காத்து, எல்லைப் பிரச்சினையின் தீர்வுக்காக உரிய நடவடிக்கைகளை அமைக்க வேண்டும் என்று சீனா இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தது.இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்