இந்திய செய்தித்தாளில் திபெத் பற்றி சீனத் தூதரின் கட்டுரை

இலக்கியா 2019-11-07 11:04:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வேய் டுங் 6ஆம் நாள் “இந்துஸ்தான் டைம்ஸ்” என்ற செய்தித்தாளில், “சீனத் திபெத்தின் வளர்ச்சியும் மத நம்பிக்கை சுதந்திரமும்” என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டார். இக்கட்டுரையின் வழி திபெத் பிரச்சினையில் சீனாவின் கோட்பாட்டு நிலைப்பாடு மற்றும் வாழும் புத்தர்களின் மறுபிறவி முறைமை வரலாற்றை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சீனாவின் ட்சிங் வம்சம் முதல் மத்திய அரசிடமிருந்து தலாய் லாமா, பான்சென் லாமா ஆகியோர் முக்கிய அரசியல் மற்றும் மதத் தகுநிலையைப் பெற்று வருகின்றனர். வாழும் புத்தர்களின் மறுபிறவி பரம்பரை அமைப்பு சீனாவின் சட்ட விதிகள், மதச் சடங்குகள், வரலாற்று வழக்கம் முதலியவற்றுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். திபெத் பிரச்சினை குறித்து இந்திய அரசு நிலைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதன் வழி தடங்கலை நீக்கி, சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்